துணைவேந்தர் நியமன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
துணைவேந்தர் நியமன அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நெல்லை,

இதுகுறித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் நாகராஜன், நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள சங்க அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அவசர சட்டம்
தமிழக அரசு கடந்த மே மாதம் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து சில சட்ட திருத்தங்களை, அவசர சட்டமாக கொண்டு வந்துள்ளது. துணைவேந்தர் நியமனங்களை சீர்படுத்தவே இந்த அவசர சட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த அவசர சட்டத்தில், துணைவேந்தர் நியமனங்களில் உள்ள சீர்கேடுகளை தடுப்பதற்கான எதுவும் குறிப்பிடப்படவில்லை.
புதிய சட்டத்தின்படி, தேர்வுக்குழு உறுப்பினர் பட்டியலில் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர், சிறந்த கல்வியாளர் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுக்குழு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றால் அந்த குழுவில் அரசு அல்லது கவர்னரின் பிரதிநிதி இருக்க கூடாது. இந்த சட்ட திருத்தம் அரசின் தலையீட்டை மேலும் வலுப்படுத்தும்.
திருத்த வேண்டும்
எனவே இந்த அவசர சட்டம் தேவையற்றது. இதை சட்டமன்ற கூட்டத்தில் நிரந்தர சட்டமாக்க முன்மொழியக்கூடாது. உயர்கல்வியோடு தொடர்புடைய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், சிறந்த கல்வியாளர்களோடு மீண்டும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
திறமையான, நேர்மையான மற்றும் ஆளுமை கொண்ட துணைவேந்தரை நியமனம் செய்யும் வகையில் தேவையான சட்ட திருத்தத்தை கொண்டு வரவேண்டும். மேலும் துணைவேந்தருக்கான கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பற்றி வரையறை செய்யும் போது கல்லூரிகளில் பணிபுரியும் இணை பேராசிரியர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கல்லூரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் நாகராஜன் கூறினார்.
பேட்டியின் போது சங்க தலைவர் சுப்பாராஜூ, பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story