மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் சதி நடக்கிறது தென்காசியில் அமைச்சர் பொன்.ராதாகிருக்ஷ்ணன் பேட்டி
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகத்தின் சார்பில் அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி விழா நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரு மஹாலில் நேற்று நடைபெற்றது.
தென்காசி,

வளர்ச்சி விழா
துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஆனந்த சந்திர போஸ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். மற்றும் ஊனமுற்றோர், ஏழை பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
விழா முடிந்த பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தேர்தல் நேரத்தில் எல்லா அரசியல் கட்சியினரும் வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம். ஆனால் அதனை நிறைவேற்றி வருவது நரேந்திர மோடி அரசுதான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மோடி அளித்து வருகிறார்.
பாமர மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்படுத்தி வருகிறார். இளைஞர்களுக்கு படிப்பிற்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் லாபம் சம்பாதிக்கிறது. தற்போது இது கையாளும் திறன் 38 பில்லியன் டன்னாக உள்ளது. இன்னும் இது அதிகரிக்கும்.
விபத்து காப்பீட்டு திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எல்லா மக்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கும். மேலும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் கிடைத்து வரும் பென்சன் திட்டம் சாதாரண மக்களுக்கும் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு வங்கிகளில் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாகி வருகின்றனர்.
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கழிவறை இல்லாத பள்ளிகளே இருக்கக் கூடாது என்று பிரதமர் உத்தரவிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து மின்சாரமே பார்க்காமல் 18 ஆயிரம் கிராமங்கள் இருந்தன. இவை அனைத்திற்கும் ஆயிரம் நாட்களுக்குள் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன்படி அந்த கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்க பல்வேறு திட்டங்களை அளித்துள்ளார். பயிர் காப்பீட்டு திட்டம் என அறிவித்து விவசாயத்திற்கு முன்பும், விவசாயம் நடைபெறும் போதும், அறுவடை நடைபெறும் போதும், எப்போது பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரண உதவி கிடைக்கும் அளவில் இந்த திட்டம் உள்ளது. இதனை விவசாயிகளுக்கு கொண்டு சென்றிருந்தால் விவசாயிகள் பலர் இறந்திருக்க மாட்டார்கள். இதனை மாநில அரசுதான் செய்ய வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு வேண்டாம் என கூறுகிறது. மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் சதி நடக்கிறது. ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுகின்ற கட்சியாக இருந்தாலும் சரி இதே நிலைமை தான்.
இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. மாநில அரசு இடம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் அந்த இடத்திற்கு விலை வைக்கிறார்கள். இது எந்த மாநிலத்திலும் இல்லை.
தமிழகத்தில் புதிதாக இணையம் வர்த்தக துறைமுகம் வர உள்ளது. இதனை சேர்த்து மொத்தம் 5 துறைமுகங்கள் தமிழகத்தில் இருக்கும். இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மதுரை – கன்னியாகுமரி, மணியாச்சி – தூத்துக்குடி, நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரெயில் பாதையை இரட்டை ரெயில் பாதையாக மாற்றவும், மின்மயமாக்கவும் ரூ.3,400 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.
திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம், தென்காசி வழியாக காவல்கிணறு வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். பிரதமர் மோடி தமிழக மக்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள தமிழர்களை சந்தித்து பேசுகிறார். இந்தியாவில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் சுப நாகராஜன், துணை தலைவர் நடராஜன், பாரதீய ஜனதா தேசிய குழு உறுப்பினர் அன்புராஜ், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், நகர தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், கருப்பசாமி, குற்றாலம் திருமுருகன், செந்தூர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story