சென்னை கொண்டிதோப்பில் வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்கள் கைது
சென்னை கொண்டிதோப்பு பெத்துநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26).
ராயபுரம்,
நேற்று முன்தினம் இரவு இவர், காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த 2 மர்மநபர்கள், அங்கு இருந்த மடிக்கணினி மற்றும் 3 செல்போன்களை திருடி விட்டு தப்பி ஓடினர்.
சத்தம் கேட்டு எழுந்த மணிகண்டன், ரோந்து போலீசார் உதவியுடன் 2 பேரையும் மடக்கி பிடித்து ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், கொருக்குப்பேட்டை மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் என்பதும், நண்பர்களான இருவரும் மணிகண்டன் வீட்டுக்குள் புகுந்து திருடியதும் தெரிந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மடிக்கணினி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story