கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 3 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
சென்னையை அடுத்த மாதவரம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர், மாதவரத்தில் உள்ள டயர் விற்பனை டீலரிடம் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கனகவல்லி (வயது 34).
செங்குன்றம்,
கணவன்–மனைவி இருவரும் பெரியபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். செங்குன்றத்தை அடுத்த கிரான்ட்லைன் அருகே வந்தபோது, அவர்களுக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்தபடி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென கனகவல்லி கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story