தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2017 3:45 AM IST (Updated: 16 Jun 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம், தேனாச்சிபட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 24).

தாம்பரம்,

இவர், சென்னையில் உள்ள தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அடுத்த அகரம்தென் பிரதான சாலையில் சேலையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் முன்பு சாலையை கடந்து செல்ல முயன்ற நாகலாந்தை சேர்ந்த ஹெலுய்கிலி(22) என்பவர் மீது மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஹெலுய்கிலிக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார், அவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story