ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக்கோரி துவார் ஊராட்சி பகுதியை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தர்வகோட்டை,

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக்கோரி துவார் ஊராட்சி பகுதியை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன் சம்பவ இடத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story