ரேஷன் கடையில் கலர் துவரம் பருப்பு அதிகாரிகள் விசாரணை
அருப்புக்கோட்டையில் வெள்ளைக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட துவரம் பருப்பு சிவப்பு உள்ளிட்ட பல கலரில் இருந்ததை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் வெள்ளைக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட துவரம் பருப்பு சிவப்பு உள்ளிட்ட பல கலரில் இருந்ததை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த துவரம் பருப்பு மூட்டைகளையும் அவிழ்த்து பார்த்தனர். இதில் ரேஷன்கடையில் இருந்த ஒரு மூட்டை துவரம் பருப்பு மட்டுமே பல நிறங்களில் இருப்பது தெரியவந்தது. இந்த பருப்பு கர்நாடகாவில் இருந்து வாங்கப்பட்டதாகும். அதன் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story