பெரம்பலூரில் நாய்கள் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் சாவு
பெரம்பலூரில் நாய்கள் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் இறந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் வெங்கடேசபுரம் ஏ.இ.ஓ. அலுவலக சாலை அருகே வசித்து வருபவர் செல்வராஜ். அப்பகுதியில் இவருக்கு சொந்த மான விவசாய கிணறு உள்ளது. இந்நிலையில் புள்ளிமான் ஒன்று எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள அந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த மான் இறந்தது. நேற்று அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் மான் இறந்து கிடப்பதை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். பின்னர் அவர்கள், வலை மூலம் கிணற்றுக்குள் இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் இறந்து போன மானின் உடல் பெரம்பலூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வனத்துறையினர் விசாரணையில், கிணற்றுக்குள் இறந்து கிடந்தது 2 வயதுடைய ஆண் புள்ளிமான் என்பதும், நாய்கள் துரத்தியதில் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்து இறந் திருக்கலாம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து பெரம்பலூர் கால்நடை மருத்துவமனையில் அந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பேரளி வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
கிணற்றுக்குள் தவறி விழுந்தும், நாய்கள் கடித்து குதறியும் மான்கள் இறக்கும் சம்பவம் பெரம்பலூரில் தொடர் கதையாக நடக்கிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
Next Story