கோட்டைக்காடு-பெண்ணாடம் இடையே பாலப்பணியை தொடங்க கோரி ஆர்ப்பாட்டம்
வெள்ளாற்றில் கோட்டைக்காடு- பெண்ணாடம் இடையே பாலப்பணியை விரைந்து தொடங்க கோரி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்.எஸ்.மாத்தூர்,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூர் அடுத்துள்ள வெள்ளாற்றில் கோட்டைக்காடு-பெண்ணாடம் இடையே பாலம் கட்டி முடிக்கப்பட்டால் கடலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் விதமாக அமையும். இதனால் அருகில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவர். இதனை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக பொதுமக்கள் வெள்ளாற்றில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து 2013-ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கோட்டைக்காடு-பெண்ணாடம் சாலை தரம் உயர்த்தப்படும். வெள்ளாற்றில் கோட்டைக்காடு-பெண்ணாடம் இடையே உயர்மட்ட பாலம் கட்டித்தரப்படும் என அறிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
இதையடுத்து வெள்ளாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அரசு இதற்கான நிதியை ஒதுக்கியும் நிர்வாக அனுமதி தரவில்லை.இந் நிலையில் வெள்ளாற்றில் கோட்டைக்காடு-பெண்ணாடம் இடையே விரைந்து பாலம் கட்டும் பணியை தொடங்க கோரி நேற்று அனைத்துக்கட்சியினர் வெள்ளாற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளாற்று பால போராட்டக்குழு தலைவர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாற்றில் விரைந்து பாலத்தை கட்ட வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பா.ம.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story