மாடுகள் வாங்க வந்த கர்நாடக வியாபாரிகளை சத்தியிலேயே தடுத்து திருப்பி அனுப்பிய போலீசார்
கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வாங்க வந்த கர்நாடக வியாபாரிகளை சத்தியிலேயே போலீசார் திருப்பி அனுப்பினர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 150 கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.
நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு கோவை, நாமக்கல், சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ரூ.34 ஆயிரத்துக்கு விற்பனை
பசுமாடுகள் 400, எருமை மாடுகள் 300 என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.34 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
சென்னை, திருவண்ணாமலை, ஆத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், மராட்டியம், ஆந்திரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.
கர்நாடக வியாபாரிகள்...
இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, ‘இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகளை விலைபேசி வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று (நேற்று) கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வியாபாரிகளை, சத்தியமங்கலம் வாகன சோதனையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டனர். மேலும் நொய்யல் பகுதியில் இருந்து விவசாயிகள் 20 வாகனங்களில் கொண்டு வந்த மாடுகளையும் போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.
போலீசாரின் தொடர் கெடுபிடியால் தற்போது கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் கொண்டுவரும் விவசாயிகளும், மாடுகள் வாங்க வரும் விவசாயிகளும் சிரமப்படுகிறார்கள்’ என்றார்.

Related Tags :
Next Story