மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த கேரள வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்
தடைகாலம் முடிந்த முதல் நாளிலேயே நேற்று சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க கேரள வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குள் மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு திரும்புவது வழக்கம்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றால் மீன்கள் இனம் அடியோடு அழிந்து விடும் என கருதி ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் 45 நாட்கள் வரை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் கடற்கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் மேலும் 16 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த காலங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீன்பிடிக்க சென்றனர்
61 நாட்கள் தடைகாலம் முடிவடைந்ததையொட்டி நேற்று அதிகாலையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 200–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடலில் உற்சாகமாக வலையை விரித்து மீன் பிடித்தனர். முதல் நாள் என்பதால் ஊழா வகை மீன்கள், விளமீன், பாறை, வஞ்சிரம் மீன், நவரை, கணவாய், கிளிஞ்சல் போன்ற மீன்கள் அதிகளவில் சிக்கின. மீனவர் ஒருவரின் வலையில் 100 கிலோ திருக்கை மீனும் சிக்கியது.
இரவு 9 மணிக்கு விசைப்படகுகள் கரை திரும்பின. கடற்கரையில் காத்திருந்த கேரள வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். மீன்கள் அதிக விலைக்கு ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைகாலம் இருப்பதால் ஏராளமான வியாபாரிகள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்திருந்ததை காண முடிந்தது. இதனால் மீன்கள் அதிக விலைக்கு ஏலம் போனதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story