ஆதர்ஷ் ஊழல் வழக்கு: அசோக் சவான் மீதான விசாரணையை தொடர வேண்டாம்


ஆதர்ஷ் ஊழல் வழக்கு: அசோக் சவான் மீதான விசாரணையை தொடர வேண்டாம்
x
தினத்தந்தி 16 Jun 2017 5:24 AM IST (Updated: 16 Jun 2017 5:24 AM IST)
t-max-icont-min-icon

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் மீது விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அனுமதி அளித்தார்.

மும்பை,

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் மீது விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அசோக் சவான் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.வி.மோரே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அசோக் சவான் மீதான ஆதர்ஷ் ஊழல் வழக்கு விசாரணையை தொடர வேண்டாம் என்று சிறப்பு கோர்ட்டில் தெரிவிக்குமாறு சி.பி.ஐ. தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 21–ந் தேதிக்கு தள்ளிவைத்த அவர், அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார்.


Next Story