குளங்களில் விவசாயத்துக்கு எடுக்கப்படும் வண்டல் மண்ணை வேறு பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
குளங்களில் விவசாயத்துக்கு எடுக்கப்படும் வண்டல் மண்ணை வேறு பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளம், கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இலவசமாக வண்டல் மண் எடுக்க மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அணை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 193 குளங்கள், ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 1,482 குளங்கள் ஆகிய விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை தவிர, வியாபார நோக்கத்தோடு செங்கல் சூளை, கட்டிடப்பணி போன்ற வேறு பணிகளுக்கு பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story