கிண்டியில் ‘‘கடன் கொடுக்க மறுத்ததால் தொழில் அதிபரை வெட்டி கொன்றேன்’’ கைதான டிரைவர் வாக்குமூலம்


கிண்டியில் ‘‘கடன் கொடுக்க மறுத்ததால் தொழில் அதிபரை வெட்டி கொன்றேன்’’ கைதான டிரைவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:45 AM IST (Updated: 17 Jun 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்தவர் உதயபாலா (வயது 36). தொழில் அதிபரான இவர்,

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் எலக்ட்ரிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த உதயபாலா, கடந்த 5–ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரித்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக கிண்டி ஜோதி நகரைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் பிரபாகரன்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், ‘‘உதயபாலாவிடம் கடனாக பணம் கேட்டேன். அவர் கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் வெட்டி கொலை செய்தேன். பின்னர் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம், 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்று விட்டேன்’’ என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பிரபாகரன் மட்டும் தனியாக இந்த கொலையை செய்து இருக்க முடியாது என சந்தேகப்படும் போலீசார், இது தொடர்பாக அவருடைய நண்பர்களிடமும் விசாரித்து வருகின்றனர். மேலும் உண்மையிலேயே பணத்துக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story