வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் சட்டை கிழிப்பு: 2 பேர் கைது


வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் சட்டை கிழிப்பு: 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2017 4:00 AM IST (Updated: 17 Jun 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி அவரது சட்டையை கிழித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களியக்காவிளை,

குமரி மாவட்டம் பளுகல் அருகே மடிச்சல் தோப்புவிளைவீடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 54). இவர் பளுகல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.

நேற்று முன்தினம் மாலை சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் மலையடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அந்த வழியாக ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டு கொண்டிருந்தனர்.

தாக்குதல்

அப்போது, மலையடியை சேர்ந்த சுரேஷ்குமார் (34), மணிகண்டன் (37), பிஜு (40) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் போலீசாரிடம் சென்று இந்த பகுதியில் நின்று வாகன சோதனை செய்யக்கூடாது என தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், திடீரென சப்-இன்ஸ்பெக்டர் கோபியை சரமாரியாக தாக்கியதாகவும் தெரியவருகிறது. இதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மணிகண்டன், சுரேஷ்குமார், பிஜு ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கோபி பளுகல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பிஜுவை தேடி வருகிறார்கள்.

Next Story