கவுண்டம்பாளையத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கவுண்டம்பாளையத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பெ.நா.பாளையம்,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையம் விஜயலட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த மதுக்கடையை கவுண்டம்பாளையம் சுடுகாட்டு ரோட்டில் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நேற்று பெரியநாயக்கன்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் மதுக்கடைக்கு எதிராக எழுதிய வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர். சில பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆர்பாட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story