20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் உண்ணாவிரதம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:45 AM IST (Updated: 17 Jun 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

கடலூர்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் பேரூராட்சி அலுவலர்களும், ஊழியர்களும் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

பேரூராட்சி பணியாளர்களுக்கு கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும், தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், பேரூராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம்

உண்ணாவிரத போராட்டத்துக்கு அனைத்து சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் சுந்தரமூர்த்தி, ஆறுமுகம், செல்லப்பிள்ளை, ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட செயலாளர்கள் அருள்குமார், பாலமுருகன், சக்கரவர்த்தி, அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ரவிக்குமார் தொடக்க உரையாற்றினார். மாநில நிர்வாகிகள் தங்க வேல், பொன்னுசாமி, ஜனார்த்தனம் ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.


Next Story