பெரம்பலூரில் ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
பெரம்பலூரில் ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் நேற்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக்கழகம், பெரம்ப லூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஆகியவற்றின் சார்பில் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வல மானது பாலக்கரையிலிருந்து தொடங்கி சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந் தது. இந்த ஊர்வலத்தில் பெரம்பலூரில் உள்ள நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு ஒவ்வொரு ரத்த கொடையும் ஒரு புதிய வாழ்வு என்ற தலைப்பில், ரத்ததானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் கருத்துகளை பொதுமக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர்.
பாராட்டு சான்றிதழ்
உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி, கடந்த வருடம் 3 முறைக்கு மேல் ரத்ததானம் வழங்கியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக 3 நபர்களுக்கு சான்றிதழ்களும், மாவட்ட அளவில் அதிக அளவில் ரத்த தானம் செய் வோம் என்று பதிவு செய்த கல்லூரிகளுக்கு கேடயம் மற் றும் பாராட்டு சான்றிதழ்களை கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு (மதுவிலக்கு) தங்கவேல் வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் ரத்ததானம் மற்றும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்திடும் வகையில் ஆட்டோக்களில் ரத்ததானம் மற்றும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஒட்டினார்.
ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட திட்டமேற்பார்வையாளர் சுமதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆய்வக நுட்புனர்கள், ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story