போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:45 AM IST (Updated: 17 Jun 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மாத்தூர் அருகே சந்துக்கடை மூலம் மதுவிற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத் தினர்.

ஆர்.எஸ்.மாத்தூர்,

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் மற்றும் இடையக்குறிச்சி பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன. இதனை பயன்படுத்தி கொண்டு சிலர் வெளிஇடங்களிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து ஆர்.எஸ்.மாத்தூர் அருகே கொடுக்கூர் உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்து சந்துக்கடைகள் மூலம் சிலர் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த கடைகளில் மது குடித்துவிட்டு செல்வோர் அப்பகுதியிலுள்ள பெண்களை கேலி, கிண்டல் செய்து தொல்லை கொடுக்கின்றனர். இது குறித்து குவாகம் போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதை கண்டித்து கொடுக்கூர் கிராம மக்கள் நேற்று குவாகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சந்துக்கடைகளில் சட்டவிரோதமாக மதுவிற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். தகவல் அறிந்த குவாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மதுவிற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story