அந்தேரி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வலம் வந்த வக்கீல் கைது


அந்தேரி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வலம் வந்த வக்கீல் கைது
x
தினத்தந்தி 17 Jun 2017 4:28 AM IST (Updated: 17 Jun 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வலம் வந்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

அந்தேரி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வலம் வந்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.

போலி டிக்கெட் பரிசோதகர்

மும்பை, அந்தேரி ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்களின் நடமாட்டம் இருப்பதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். சம்பவத்தன்று டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற ஒருவரை பிடித்து அபராதம் விதித்து கொண்டு இருந்தார். வழக்கமாக தண்டவாளத்தை கடந்து செல்பவர்களை ரெயில்வே போலீசார் தான் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

இதையடுத்து சந்தேகமடைந்த ரெயில்வே போலீசார் அந்த டிக்கெட் பரிசோதகரிடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என்பது தெரியவந்தது.

தினமும் ரூ.2 ஆயிரம்

இதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் காந்திவிலியை சேர்ந்த வக்கீல் ரவீந்திர நேதாப்ஜீ(வயது60) என்பது தெரியவந்தது. இவர் டிக்கெட் பரிசோதகர் போல டிக்கெட் இல்லாமல், தண்டவாளத்தை கடக்கும் பயணிகளிடம் இருந்து தினமும் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் வசூலித்து சம்பாதித்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ரவீந்திர நேதாப்ஜீ மீது ரெயில்வே போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story