திருமணமான 7 நாட்களில் மனைவி 8 மாத கர்ப்பமாக இருந்ததால் அதிர்ச்சி
தேவலபுரா பகுதியில், திருமணமான 7 நாட்களில் மனைவி 8 மாத கர்ப்பமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
மண்டியா,
தேவலபுரா பகுதியில், திருமணமான 7 நாட்களில் மனைவி 8 மாத கர்ப்பமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 7–வது நாளில் அதிர்ச்சிமண்டியா மாவட்டம் காசலகெரே கிராமம் தேவலபுரா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 30). இவருக்கும், நாகமங்கலா தாலுகா பிந்தேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 8–ந் தேதி திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஆதிசுஞ்சனகிரியில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரது முன்னிலையில் நடந்த திருமணம் ஆகும்.
திருமணம் முடிந்த 7–வது நாளில் வெங்கடேசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது திருமணம் முடிந்த 7–வது நாளான கடந்த 15–ந் தேதி(நேற்று முன்தினம்) வெங்கடேசும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர்.
8 மாத கர்ப்பம்அப்போது அந்த பெண் தனக்கு திடீரென்று வயிறு வலிப்பதாக கூறி உள்ளார். மேலும் அவர் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து வெங்கடேஷ், தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வெங்கடேசின் மனைவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் அலறி துடித்துள்ளார். ஏன் எனில் அவருக்கும், அவரது மனைவிக்கும் திருமணமாகி 7 நாட்கள்தான் ஆகிறது. ஆனால் அவருடைய மனைவி 8 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததால் வெங்கடேஷ் மிகவும் மனமுடைந்து அதிர்ந்து போனார்.
காதலன் காரணம்பின்னர் இதுகுறித்து அவர் நாகமங்கலா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், திருமணத்திற்கு முன்பு தான் மண்டியா தாலுகா தொட்டகருடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், தன்னுடைய கர்ப்பத்துக்கு தன்னுடைய காதலன்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தன்னுடைய பெற்றோருக்கும் தெரியும் என்றும், ஆனால் அவர்கள் எனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கடேசுக்கு என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
பரபரப்புஇதையடுத்து போலீசார் வெங்கடேசின் மனைவிக்கு அறிவுரைகள் வழங்கி, அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் இப்பிரச்சினைக்கு சுமுக முடிவு காண வெங்கடேஷ் தரப்பினரும், அவருடைய மனைவி தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
8 மாத கர்ப்பத்தை மறைத்து ஒரு இளம்பெண், வாலிபர் ஒருவரை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.