புதூர் நாடு மலை கிராமத்தில் வங்கி தொடங்க நடவடிக்கை


புதூர் நாடு மலை கிராமத்தில் வங்கி தொடங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2017 9:15 PM GMT (Updated: 2017-06-21T18:54:08+05:30)

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள புதூர் நாடு மலை கிராமத்தில் கள விளம்பர துறை சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள புதூர் நாடு மலை கிராமத்தில் கள விளம்பர துறை சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசால் கொண்டு வந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள், செல்வமகள் சேமிப்பு திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலமும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

முகாமில் ஸ்டேட் வங்கியின் வேலூர் மண்டல பொது மேலாளர் சாரதி பேசுகையில், ‘‘ஏழை எளிய மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள முத்ரா வங்கி கடன் திட்டத்தில், பிணை ஏதும் இன்றி அருகில் உள்ள வங்கிகளை அணுகி கடன் வாங்கி முன்னேற்றம் அடைய வேண்டும்’’ என்றார். வேலூர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் பொது மேலாளர் தாமோதரன் பேசுகையில், ‘‘விரைவில் புதூர்நாடு கிராமத்தில் வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். கள விளம்பர அலுவலர் ஜெயகணேஷ், அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் பானுமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் வாசுகி, இந்தியன் வங்கி நிதி ஆலோசகர் சவுந்தரராஜன் மற்றும் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.


Next Story