யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக தொழிலாளர்கள் முற்றுகை


யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-21T20:42:21+05:30)

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி வடக்கு இலுப்பையூரணி பஞ்சாயத்தில் தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்க வேண்டும். வாரந்தோறும் நிலுவைத்தொகை இல்லாமல் முறையாக சம்பளம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் வகையில் அடிபம்புகள் அமைக்க வேண்டும். பணித்தளத்தில் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் தேசிய ஊரக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் யூனியன் ஆணையாளர் சேவுக பாண்டியனிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.


Next Story