மணல் கொள்ளையை தடுக்க தவறிய 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நீக்கம்


மணல் கொள்ளையை தடுக்க தவறிய 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நீக்கம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:00 PM GMT (Updated: 2017-06-21T23:06:59+05:30)

மணல் கொள்ளையை தடுக்க தவறிய 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நீக்கம் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவு

மன்னார்குடி,

மன்னார்குடியை அடுத்துள்ள கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோரையாறு மற்றும் அரிச்சந்திரா ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வந்துள்ளது. இந்த மணல் கொள்ளையை மழவராயநல்லூர் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி, நாலாம் சேத்தி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் ஆகிய 2 பேரும் தடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் 2 பேரையும் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி 2 கிராம நிர்வாக அலுவலர்களையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story