6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தாராளமாக நிவாரணம் வழங்க வேண்டும்


6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தாராளமாக நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:45 PM GMT (Updated: 21 Jun 2017 5:49 PM GMT)

6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தாராளமாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று, முன்னாள் முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயத்தில் முன்னாள் முதல்–அமைச்சரும், அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: சிறையில் இருக்கும் சசிகலாவை டி.டி.வி.தினகரனும், தம்பிதுரையும் சந்தித்திருக்கிறார்களே அது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: அவர்கள் தான் உரிய பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி: கட்சியிலும் ஆட்சியிலும் ஒதுங்கியிருப்பதாக கூறிய டி.டி.வி.தினகரன் இப்போது கட்சி பணியில் ஈடுபடப்போவதாக கூறியிருக்கிறாரே?

பதில்: அவர்கள் ஆளுக்கொரு கருத்தை சொல்லிவருகிறார்கள்.

நடவடிக்கை

கேள்வி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றதாக கூறப்படும் வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்த சபாநாயகர், சட்டசபை செயலாளருக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளாரே?

பதில்: சட்டப்பூர்வமான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்

கேள்வி: 6 ஆண்டுகளாக குறுவை பாதிக்கப்பட்டிருக்கிறது?

பதில்: விவசாயிகளுக்கு தாராளமாக நிவாரணத்தை அரசு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாபநாசம் ஒன்றியம் பசுபதி கோவில் ஊராட்ச எல்லையிலும், பூதலூர் ஒன்றிய எல்லையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story