பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு


பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 2017-06-21T23:32:22+05:30)

பொன்னேரியை அடுத்த பழைய பர்மா நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த பழைய பர்மா நகரை சேர்ந்தவர் கலையரசன். கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர் குடும்பத்தினருடன் அருகில் உள்ள தந்தை வீட்டில் தூங்கினார். நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 2 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. 

இது குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story