யோகா பயிற்சி


யோகா பயிற்சி
x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 2017-06-21T23:36:27+05:30)

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 145 மாணவர்கள் 20 வகையான யோகாசனங்களை செய்து யோகா கலையின் சிறப்பினை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 145 மாணவர்கள் நின்ற நிலை ஆசனங்கள், அமர்ந்த நிலை ஆசனங்கள், படுத்த நிலை ஆசனங்கள் என 20 வகையான யோகாசனங்களை செய்து யோகா கலையின் சிறப்பினை தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை பதஞ்சலி யோகா நிறுவன நிர்வாகி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு யோகா கலையின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீநிகேதன் பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் பரணிதரன், பள்ளி யோகா ஆசிரியர் தயாளன், பள்ளி முதல்வர் மாலதிராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Next Story