ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டாலும் வரி விதிப்பில் சில திருத்தங்கள் செய்யப்படும்


ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டாலும் வரி விதிப்பில் சில திருத்தங்கள் செய்யப்படும்
x
தினத்தந்தி 22 Jun 2017 12:00 AM GMT (Updated: 21 Jun 2017 6:58 PM GMT)

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டாலும் வரி விதிப்பில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

கோவை,

மத்திய தொழில்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தருவதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன். கணினிவழி ஜி.எஸ்.டி. தொடர்பாக ஏற்படும் பாதிப்பு, சந்தேகங்கள் குறித்து கோவை, திருப்பூர் சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் நேரடியாக விளக்கப்படும்.

திருத்தங்கள் செய்யப்படும்

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டாலும் அடுத்த 3 மாதங்களுக்குள் வரி விதிப்பில் சில திருத்தங்கள் செய்யப்படும். ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அவரை வேண்டாம் என்று கூறுவதற்கு எந்த காரணங்களும் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.

ராம்நாத் கோவிந்த் செய்தி தொடர்பாளராக இருந்தபோது கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுவது முற்றிலும் பொய்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story