இ-சேவை மையங்களில் ‘ஸ்மார்ட்’ கார்டுகள் பெறும் வசதி கலெக்டர் தொடங்கி வைத்தார்


இ-சேவை மையங்களில் ‘ஸ்மார்ட்’ கார்டுகள் பெறும் வசதி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 21 Jun 2017 7:02 PM GMT)

இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டு பெறும் வசதியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம், 

தாசில்தார் அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டு பெறும் வசதியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, காஞ்சீபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 46 ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 530 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வேண்டி விண்ணப்பிக்க, திருத்த, சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய இணையதள வழியில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் மேற்படி பணியினை தாங்களாக இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ மாற்றம் செய்து கொள்ளலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.பன்னீர்செல்வம், தாசில்தார் கியூரி, உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story