போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து வக்கீல் தர்ணா போராட்டம்


போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து வக்கீல் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2017 12:45 AM GMT (Updated: 21 Jun 2017 7:56 PM GMT)

அ.தி.மு.க. தீபா அணியில் உயர்மட்டக்குழு உறுப்பினராக உள்ள வக்கீல் சுப்பிரமணி கமிஷனர் அலுவலக வாசலில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

சென்னை, 

அ.தி.மு.க. தீபா அணியில் உயர்மட்டக்குழு உறுப்பினராக உள்ள வக்கீல் சுப்பிரமணி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென்று அவர் கமிஷனர் அலுவலக வாசலில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். கமிஷனர் அலுவலக அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் தலைவர் ஜெ.தீபாவை, நாஞ்சில் சம்பத் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். அவரை கண்டிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இதற்காக அனுமதிகேட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தேன். அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இது சம்பந்தமாக கமிஷனர் அலுவலக அதிகாரிகளை சந்தித்துபேச வந்தேன். அதற்கும் மறுத்துவிட்டனர். அதனால் தான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். நாஞ்சில்சம்பத் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story