நவிமும்பையில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி டியூசன் சென்றுவிட்டு திரும்பிய போது பரிதாபம்


நவிமும்பையில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி டியூசன் சென்றுவிட்டு திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 21 Jun 2017 9:28 PM GMT (Updated: 21 Jun 2017 9:28 PM GMT)

நவிமும்பையில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள். டியூசன் சென்றுவிட்டு திரும்பிய போது இந்த துயர சம்பவம் நடந்தது.

மும்பை,

நவிமும்பையில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள். டியூசன் சென்றுவிட்டு திரும்பிய போது இந்த துயர சம்பவம் நடந்தது.

மாணவர்கள்

நவிமும்பை ரபாலேவை சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்றுமுன்தினம் அங்குள்ள டியூசன் வகுப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் தானே– பேலாப்பூர் நெடுஞ்சாலையோரத்தில் ரபாலே எம்.ஐ.டி.சி. போலீஸ் நிலையம் அருகே உள்ள குளத்தில் இறங்கி குளிக்க விரும்பினார்கள்.

இதையடுத்து மாணவர்கள் ஒவ்வொருவராக குளத்தில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். இந்தநிலையில் மாணவர்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதன்பின்னர் அவர்களால் நீந்தி கரைக்கு வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

2 பேர் பலி

இதனால் உதவிக் கேட்டு அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் குதித்து மாணவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்களில் 2 மாணவர்கள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் வெகுநேரத்திற்கு பிறகு மாணவர்கள் இருவரையும் பிணமாக மீட்டனர். எம்.ஐ.டி.சி. போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாஷி மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பலியான மாணவர்கள் பெயர் சோனு குப்தா(வயது14), சச்சின் சரோஜ்(14) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story