உல்லாஸ்நகரில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் கைது 2 மாணவிகளையும் கற்பழித்த கொடூரம்

உல்லாஸ்நகரில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் கைது 2 மாணவிகளையும் கற்பழித்த கொடூரம்
x
தினத்தந்தி 21 Jun 2017 9:37 PM GMT (Updated: 2017-06-22T03:06:55+05:30)

உல்லாஸ்நகரில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 2 மாணவிகளையும் அவர் கற்பழித்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மும்பை,

உல்லாஸ்நகரில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 2 மாணவிகளையும் அவர் கற்பழித்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாலியல் தொல்லை

தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த 8 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில தினங்களாக அவன் பள்ளிக்கு செல்லமாட்டேன் என அடம் பிடித்தான்.

பெற்றோர் அவனை வலுக்கட்டாயமாக பள்ளியில் கொண்டு விட முயன்றபோது, தன்னை ஆசிரியர் பாலச்சந்திர பாங்கலே(வயது54) என்பவர் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவலை கூறி அழுதான்.

இதைக்கேட்டு பதறிப்போன பெற்றோர் ஆசிரியர் மீது ஹில்லைன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ஆசிரியர் கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாலச்சந்திர பாங்கலேவை கைது செய்தனர். விசாரணையில், அவர் இதேபோல மேலும் 2 மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதும், 2 மாணவிகளை கற்பழித்து கொடூர செயலில் ஈடுபட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வரும் 27-ந்தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்தனர்.

மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இந்த சம்பவம் உல்லாஸ்நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story