டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்
x
தினத்தந்தி 22 Jun 2017 8:30 PM GMT (Updated: 22 Jun 2017 5:28 PM GMT)

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

பாளையங்கோட்டை அன்னகவுரிநகரின் விரிவாக்கப்பகுதியான கிருபாநகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொதுச்செயலாளர்கள் சுரேஷ், பாலாஜி கிருஷ்ணசாமி, எஸ்.சி. அணிதுணைதலைவர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வற்புறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று தெரிவித்துனர்.

சிவசேனா கட்சியினர்...

சிவசேனா கட்சியினர் மாவட்ட தலைவர் கோவைரமேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, முக்கூடல் முத்துமாலையம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.


Next Story