ஏரல் அருகே கள்ளக்காதலியுடன் கட்டிட தொழிலாளி தலைமறைவு தன்னுடைய 4 குழந்தைகளையும் அழைத்து சென்றார்


ஏரல் அருகே கள்ளக்காதலியுடன் கட்டிட தொழிலாளி தலைமறைவு தன்னுடைய 4 குழந்தைகளையும் அழைத்து சென்றார்
x
தினத்தந்தி 22 Jun 2017 8:00 PM GMT (Updated: 2017-06-22T23:53:54+05:30)

ஏரல் அருகே கள்ளக்காதலியுடன் கட்டிட தொழிலாளி தன்னுடைய 4 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தலைமறைவானார்.

ஏரல்,

ஏரல் அருகே கள்ளக்காதலியுடன் கட்டிட தொழிலாளி தன்னுடைய 4 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தலைமறைவானார்.

கட்டிட தொழிலாளி

ஏரலை அடுத்த புதுமனையைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 28). இவர்களுக்கு ஈசுவரன் (10), இசக்கிராஜா (6) ஆகிய 2 மகன்களும், பிரியா (8), இந்துமதி (7) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் ஏரலில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் இசக்கி அம்மாள். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுடலைமுத்துவுக்கும், இசக்கி அம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

4 குழந்தைகள், கள்ளக்காதலியுடன் தலைமறைவு

இதனை அறிந்த ராமலட்சுமி தன்னுடைய கணவரையும், இசக்கி அம்மாளையும் கண்டித்தார். ஆனாலும் சுடலைமுத்து, இசக்கி அம்மாள் ஆகியோர் தங்களது கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ராமலட்சுமி தன்னுடைய குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர் தேசிய ஊரக வேலைக்கு சென்றார்.

சுடலைமுத்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். சிறிதுநேரத்தில் அவர் பள்ளிக்கூடத்துக்கு சென்று, தன்னுடைய 4 குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் தன்னுடைய 4 குழந்தைகளுடன், இசக்கி அம்மாளையும் அழைத்து கொண்டு தலைமறைவானார்.

போலீசார் விசாரணை

மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த ராமலட்சுமி தன்னுடைய கணவர், 4 குழந்தைகளையும் அழைத்து கொண்டு, கள்ளக் காதலியுடன் தலைமறைவானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கட்டிட தொழிலாளி தன்னுடைய 4 குழந்தைகளை அழைத்து கொண்டு, கள்ளக்காதலியுடன் தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story