சேலத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-25T02:58:07+05:30)

சேலத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம்

சேலம்,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கோவை பிரிக்கால் ஆலை தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடிக்கப்பட்டதை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் சேலம் மாவட்ட குழு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் சந்திரமோகன், மாவட்ட செயலாளர் வேல்முருகன், கோ–ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய கோவை பிரிக்கால் ஆலை தொழிலாளர்களிடம் அந்த நிர்வாகம் தரப்பில் சம்பளம் பிடித்தது நியாயமா? என நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ஆலை நிர்வாகம் பிடித்த 8 நாட்கள் சம்பளத்தை தொழிலாளர் சட்டத்தின்படி அரசாங்கமே முன் பணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story