அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் பெண்ணை வாடிக்கையாளரின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்திய ஊழியர்கள் கைது
சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு, சமத்துவபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் வேலை செய்து வருகிறார்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு, சமத்துவபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் வேலை செய்து வருகிறார்.
அங்கு வேலை பார்க்கும் சக ஊழியர்களான பட்டாபிராமைச் சேர்ந்த பூபதி (36), சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரகாஷ்(25) ஆகியோர், அந்த பெண்ணை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்தனர்.
இதனால் மனம் உடைந்த அந்த பெண், விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி, பிரகாஷ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story