சென்னாவரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
வந்தவாசி தாலுகா சென்னாவரம் கிராமத்தில் சென்னாவரம் மற்றும் பாதிரி கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் நடந்தது.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா சென்னாவரம் கிராமத்தில் சென்னாவரம் மற்றும் பாதிரி கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. மு.துரை, வந்தவாசி தாசில்தார் எஸ்.முருகன், சமூக பாதுகாப்பு நல தாசில்தார் கே.ஆர்.நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஆனந்தகுமார் வரவேற்றார்.
முகாமில் 116 விவசாயிகளுக்கு சிறு, குறு சான்றிதழ், 20 பேருக்கு இருளர் சாதி சான்று, 19 பேருக்கு பட்டா மாற்றம் உள்பட 173 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கல்வி குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செ.சீ.மணி, ஊராட்சி செயலர் யோகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.