குடிநீர் வழங்கக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்


குடிநீர் வழங்கக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 30 Jun 2017 5:30 AM IST (Updated: 30 Jun 2017 5:30 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆரணி,

ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் நேற்று சங்கீதவாடி கிராமத்தில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ஆ.சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பரணிதரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story