தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு


தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 1 July 2017 2:45 AM IST (Updated: 30 Jun 2017 7:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட, மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறியதாவது:–

3 லட்சத்து 8 ஆயிரத்து 597 வாக்காளர்கள்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 157 ஆண்கள், 1 லட்சத்து 56 ஆயிரத்து 406 பெண்கள், 34 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 8 ஆயிரத்து 597 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு, ஏதேனும் திருத்தம் இருந்தாலோ, பெயர் விடுபட்டு இருந்தாலோ உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு வரை பெயர் சேர்ப்பு, திருத்தம் படிவங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

இவ்வாறு ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறினார்.


Next Story