தூத்துக்குடியில் சரக்கு, சேவை வரியை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
தூத்துக்குடியில் சரக்கு, சேவை வரியை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சரக்கு, சேவை வரியை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கடையடைப்புமத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு திட்டமான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை இன்று (சனிக்கிழமை) முதல் அமல்படுத்துகிறது. இந்த வரிவிதிப்புக்கு தமிழ்நாட்டில் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 70 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தூத்துக்குடி நகர வியாபாரிகள் மத்திய சங்கத்தின் கீழ் 66 கிளை சங்கங்கள் உள்ளன. இதில் 15 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் தூத்துக்குடியில் உள்ள காய்கனி மார்க்கெட், வ.உ.சி. மார்க்கெட் ஆகிய 2 பிரதான மார்க்கெட்டுகளும் வழக்கம்போல் செயல்பட்டன. பெரும்பாலான நகைக்கடைகளும் திறந்து இருந்தன. ஆங்காங்கே ஓட்டல்கள், சிறிய கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இன்றுஇன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கருப்பு தினமாக அறிவித்து உள்ளதால், கடைகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.