கல்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டவர் கைது


கல்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 1 July 2017 3:30 AM IST (Updated: 1 July 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ஆர்.எம்.ஐ. நகரை சேர்ந்தவர் பாலமுருகன்.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ஆர்.எம்.ஐ. நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனது குடும்ப பிரச்சினை குறித்து கடந்த 26–ந்தேதி கல்பாக்கம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்திருந்தார். இது சம்பந்தமாக போலீசார் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி மைத்துனர் உள்பட குடும்பத்தினரை போலீஸ்நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது பாலமுருகனின் உறவினர் ஞானசுந்தரம் (வயது 36) போலீஸ்நிலையத்துக்குள் புகுந்து விசாரணை நடத்தி கொண்டிருந்த போலீசாரை தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டார்.

விசாரணையில் அவர் ஓய்வு பெற்ற போலீஸ் சப்– இன்ஸ்பெக்டரின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசுந்தரத்தை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story