மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்க வேண்டும்


மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில்  இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 July 2017 4:00 AM IST (Updated: 1 July 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் இ ருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவு

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுத்து சென்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் மண் எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சித்துறை மற்றும் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 599 ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக வண்டல் மண் எடுத்துச்செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதில் தற்போது வரை 379 நீர்நிலைகளில் விவசாயிகள், பொதுமக்கள் அதிக அளவில் வண்டல் மண் எடுத்து சென்று பயன் பெற்று வருகிறார்கள். கடந்த 29–ந்தேதி வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்து இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் ஏரிகளில் இருந்து மொத்தம் 8 லட்சம் கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண்ணை அள்ளி சென்று விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள், பொதுமக்கள் வண்டல் மண்ணை அள்ளி செல்வதற்கான அனுமதியை உடனுக்குடன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வண்டல் மண்ணை அதிக அளவில் அள்ளிச்சென்று பயன் அடைய வேண்டும் என்று அவர் பேசினார்.


Next Story