டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் பஸ்சையும் சிறைபிடித்தனர்
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று டாஸ்மாக் கடைக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் எஸ்.முருகன், தெள்ளார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார், டாஸ்மாக் கடையை 1 மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சிறைபிடித்த பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story