மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி


மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 1 July 2017 2:44 AM IST (Updated: 1 July 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் விளையாட்டா? அல்லது வர்த்தகமா? என்று மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் விளையாட்டா? அல்லது வர்த்தகமா? என்று மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

மழை பொய்த்து போனதால் கடந்த 2016–ம் ஆண்டு மராட்டியத்தில் பல பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவியது. அப்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மும்பையிலும், புனேயிலும் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்றன.

இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் நிலையில் கிரிக்கெட் போட்டிக்காக மைதானத்தை பராமரிக்க அதிக தண்ணீர் வீணடிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அந்த ஆண்டு ஏப்ரல் 30–ந் தேதிக்கு பின்னர் மராட்டியத்திற்கு வெளியே ஐ.பி.எல். போட்டிகளை நடத்திக்கொள்ளுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ஒகா, விபா கன்கன்வாடி அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்காக மும்பை வான்கடே மைதானத்தை பராமரிக்க தேவையான தண்ணீர் மும்பை மாநகராட்சியிடம் இருந்து பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஒகா கூறியதாவது:–

ஐ.பி.எல். போட்டி ஒரு விளையாட்டா? அல்லது வர்த்தகமா? என்று நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். காரணம் மாநகராட்சி தண்ணீரை முக்கியத்துவத்தின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரித்து வினியோகம் செய்கிறது. இதில் குடிநீருக்காக தண்ணீர் வழங்குவது முதல் பிரிவிலும், புனித நீராடல் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படுவது கடைசி பிரிவிலும் உள்ளது.

வணிக நோக்கத்திற்காக தொழிற்சாலைகளுக்கு வழங்குவது 3–வது பிரிவில் உள்ளது. எனவே இந்த பிரிவில் தான் ஐ.பி.எல். போட்டிக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறதா? இது ஒரு வணிக ரீதியான நடவடிக்கையா? இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ஒகா தெரிவித்தார்.

1 More update

Next Story