என்.ஆர்.புரா அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை
என்.ஆர்.புரா அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை–மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிக்கமகளூரு,
என்.ஆர்.புரா அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை–மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த ஒரு பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இவளுடைய தாயும், தந்தையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால், அந்த சிறுமி தனது தாய்மாமா பசவராஜ் வீட்டில் வசித்து வந்தாள். இந்த நிலையில் பசவராஜூம், அவருடைய மகன் சந்தோசும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.இதனால் அந்த சிறுமி, இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பசவராஜும், சந்தோசும் அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.
தந்தை–மகனின் தொந்தரவு அதிகரித்துக் கொண்டே சென்றதால், இதுகுறித்து அந்த சிறுமி அந்தப்பகுதியை சேர்ந்த ஜூபேதா என்பவரிடம் தெரிவித்துள்ளாள். ஆனால், ஜூபேதா இதுகுறித்து பசவராஜிடம் தெரிவித்துள்ளார். இதனால், பசவராஜும், அவருடைய மகன் சந்தோசும் சேர்ந்து சிறுமியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி, அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவந்து குழந்தைகள் நல அமைப்பினரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளாள்.இதுகுறித்து அவர்கள், என்.ஆர்.புரா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பசவராஜ், சந்தோஷ், ஜூபேதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமி, சிக்கமகளூருவில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.
Related Tags :
Next Story