மண்டியா தமிழ் காலனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


மண்டியா தமிழ் காலனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 1 July 2017 5:01 AM IST (Updated: 1 July 2017 5:01 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மண்டியா,

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர், சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் பல பகுதிகளில் விவசாயிகள் தர்ணா, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனால் மண்டியா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்டியா டவுனில் மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள தமிழ் காலனியில் சுமார் 300 தமிழ் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் காரணமாக தமிழ் காலனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


Next Story