திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு நேற்று ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு நேற்று ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. விழாவை யொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. காலை 9 மணி அளவில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது.
இதனையடுத்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு நான்கு மாட வீதியில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.