திருவண்ணாமலை மாவட்டத்தில் 2½ லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து உள்ளனர்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 2½ லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து உள்ளனர்
x
தினத்தந்தி 1 July 2017 5:34 AM IST (Updated: 1 July 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தனியார் துறையில் பணியில் சேர்வதற்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 962 பேர் அரசு வேலைக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தனியார் துறையில் பணியில் சேர்வதற்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்பிற்காக ஏராளமானோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துள்ளனர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 962 பேர் பதிவு செய்து உள்ளனர். அரசு வேலைக்காக காத்திருக்காமல் தனியார் துறையிலும் வேலைக்கு செல்ல முன்வர வேண்டும்.

அரசு பணிக்கு தேர்வு செய்வதற்காக அரசு போட்டி தேர்வுகளை வைக்கிறது. போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நம்பிக்கையோடு, விடா முயற்சியும் வேண்டும். அரசு பணிக்கான போட்டி தேர்வுகளில் பங்கு பெறுவதற்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. அதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் தொழில் முனைவோர்களை உருவாக்க மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் 160 பேர் தனியார் வேலைக்காக கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் விஜயமாலா, சுரேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.



Next Story