மனிதர்களை விட மினியன்களை பிடித்திருக்கிறது -பியர் கபீன்
மினியன்களை பார்த்து பார்த்து உருவாக்கியதுடன், மினியன்களில் அதிக கவனம் ஈர்க்கும் கெவின் வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஹாலிவுட்டில் ஏகப்பட்ட கற்பனை கதாபாத்திரங்கள் உயிர் பெற்றிருக்கின்றன. அதில் ‘டிஸ்பீகபில் மீ’ திரைப்படத்தில் வரும் மினியன் கதாபாத்திரமும் ஒன்று. அந்த கற்பனை கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த பெருமை, பியர் கபீனையேச் சேரும். இவரது கற்பனையில் தான் மினியன்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன. ‘டிஸ்பீகபில் மீ’ திரைப்படத்திற்கு கதை எழுதி இயக்கியதுடன், அனிமேஷன் வேலைகளை தனிநபராக செய்து அசத்தியிருக்கிறார். அத்துடன் மினியன்களை பார்த்து பார்த்து உருவாக்கியதுடன், மினியன்களில் அதிக கவனம் ஈர்க்கும் கெவின் வேடத்தில் நடித்திருக்கிறார். அவரிடம் மினியன்ஸ் சம்பந்தமான சில கேள்விகளை கேட்டோம்.
* ‘டிஸ்பீகபில் மீ’ திரைப்படத்தில் பிடித்த விஷயம்?
அந்தத் திரைப்படத்தின் சுவாரசியமான மினியன்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் மினியன்கள், சூது வாது தெரியாதவை. சிரிப்பை மட்டுமே உணவாகக் கொண்டு உயிர் வாழ்பவை. மனிதர்களிடம் பழகுவதை விட, மினியன்களுடன் பழகுவதற்கே எனக்குப் பிடித்திருக் கிறது.
* கெவின் கதாபாத்திரத்தில் நடிப்பதை பற்றி கூறுங்கள்?
என்னுடைய சுபாவத்திற்கும், மினியன்களில் ஒருவனாக வரும் கெவின் சுபாவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. கெவின் எப்போதும் குறும்புத்தனம் செய்துகொண்டிருப்பான். ஆனால் நிஜத்தில் நான் ஒரு அப்பாவி. அடுத்தவர் செய்யும் குறும்புகளை கூட ரசிக்க மாட்டேன். ஆனால் கெவின் கதாபாத்திரம் என்னை மிகவும் மாற்றிவிட்டது. படத்திற்காக மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சிரிக்கக் கற்றுக்கொண்டேன். அதே சமயத்தில் குறும்புகாரனாகவும் மாறிவிட்டேன்.
* மறக்க முடியாத தருணங்களைப் பற்றி?
‘டிஸ்பீகபில் மீ’ திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி வந்தபோது, எனக்கு வழங்கப்பட்டிருந்த கெவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருந்தேன். ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து படப் பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கையில் தயாரிப்பாளர் திடீரென கதையில் சில மாற்றங்களைக் கொண்டு வரச்சொன்னார். அதன்படி 2-ம் பாகத்தில் கெவின் கதாபாத்திரமே கிடையாது; அதிர்ந்துவிட்டேன். ஏனெனில் நடிப்பிற்காக மட்டும் 3 மாதங்கள் இடைவிடாத பயிற்சி எடுத்து, பிரமாதமாக தயாராகி இருந்தேன். ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் சொன்னால் போதும், ஒரே டேக்கில் 20 நிமிட காட்சிகளை நடித்து கொடுக்கும் அளவிற்கு பயின்றிருந்தேன். நல்ல வேளை... தயாரிப்பாளர் திடீரென மனம் மாறி, பழைய கதையையே ஓகே சொல்லிவிட்டார். அந்த ஏமாற்றத்தையும், இன்ப அதிர்ச்சியையும் என்னால் மறக்கவே முடியாது.
* கிராபிக்ஸ் கதாபாத்திரத்திற்கு எப்படி நடித்துக் கொடுப்பீர்கள்?
மோஷன் சென்சிங் டெக்னாலஜியின் மூலம் கை அசைவுகளையும், முக அசைவுகளை பதிவு செய்வார்கள். அதே சமயம், உடலின் அசைவும் பதிவாகிக் கொண்டிருக்கும். அதனால் கற்பனை கதாபாத்திரமாக இருப்பினும் நடிக்கவேண்டும். இல்லையேல் கற்பனை கதாபாத்திரங்கள் உயிர் பிழைக்காது.
* ஆயிரக்கணக்கில் மினியன்ஸ் இருப்பதை போன்று தோன்றுகிறதே? உண்மையில் எத்தனை பேர் மினியனாக நடிக்கிறீர்கள்?
மொத்தம் 4 பேர் மினியனாக நடித்துக்கொண்டிருக்கிறோம். மற்றவை அனைத்தும் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்படுகிறது. ஏனெனில் முதல் 4-ன் முக பாவனையும், உடல் அசைவுமே அதிகமாக பார்க்கப்படும். மற்றவை பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை.
* ‘டிஸ்பீகபில் மீ’ திரைப்படத்தை போன்றே ‘மினியன்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தில் நீங்கள் கெவினாக நடித்திருந்தீர்களா?
ஆம்! மினியன்ஸ் திரைப்படத்திற்கும் நானே இயக்குனர். நானே தயாரிப்பாளர். நானே நடிகர். ஆனால் என்னுடைய புனைப் பெயரில் இயக்கி, நடித்ததால் இந்த சந்தேகம் வந்திருக்கிறது. மினியன்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் என்னுடைய முழு அனுமதியுடனே தயாரிக்கப்பட்டு படமாக்கப்பட்டது.
Related Tags :
Next Story