மூவாயிரம் ஆண்டுகள் பழமையான செயற்கைக் கால்


மூவாயிரம் ஆண்டுகள் பழமையான செயற்கைக் கால்
x
தினத்தந்தி 1 July 2017 3:53 PM IST (Updated: 1 July 2017 3:52 PM IST)
t-max-icont-min-icon

மூவாயிரம் ஆண்டுகள் பழமையான குறிப்பிட்ட கல்லறையில் இருந்து மரத்தாலான அந்த செயற்கைக் காலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிப்தில் பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், கல்லறை ஒன்றில் இருந்து மூவாயிரம் ஆண்டுகள் பழமையான செயற்கைக் காலை கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தில் ஷேக் அப்ட் எல் குர்னா கல்லறையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள்தான் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கின்றனர்.

மூவாயிரம் ஆண்டுகள் பழமையான குறிப்பிட்ட கல்லறையில் இருந்து மரத்தாலான அந்த செயற்கைக் காலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த செயற்கைக் கால் மதகுரு ஒருவரது மகள் பயன்படுத்தி வந்தது எனவும், அவரது வாழ்நாளில் குறிப்பிட்ட செயற்கைக் கால் பலமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உடம்பில் உறுப்புகளின் முக்கியத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித குலம் உணர்ந்துள்ளதையும், மாற்று செயற்கை உறுப்புகளை அவர்கள் பயன்படுத்தி வந்ததையும் இது எடுத்துக்காட்டுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செயற்கைக் கால், மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது. அதில் தோலினால் ஆன வாரால் கட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது எகிப்திய நிபுணர்கள் மேற்கண்ட செயற்கைக் காலை ஆய்வு செய்துவருகின்றனர். 

Next Story